அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதாயின் ஜனாதிபதிக்கு 3 வழிகள் இருந்தன எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுர குமார திஸாநாயக்க, அதிகாரத்தை கையிலெடுக்கும் ஆயுதமாகவே அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் அத்தியாவசிய பொதுமக்கள் சேவை மற்றும் நுகர்வோர் சட்டம் தொடர்பில் கவனம் செலுத்தாமல், அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்தியமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் .
நாட்டில் அவசரகால நிலை இருப்பதாக காரணம் காட்டி, அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தும் உரிமையை ஜனாதிபதி எடுத்துக் கொண்டார். சாதாரணமாக எமது நாட்டில் அரசியலமைப்பு உள்ளது. அதன்மூலம் உருவாக்கப்பட்ட பாரிய சட்டத்திட்டங்கள் உள்ளன. அவைதான் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, திருத்தப்பட்டு நிறைவேற்றப்புடுகின்றன.
ஆனால், இந்த சகல சட்டங்களையும் தேவையென்றால் நீக்க, தேவையென்றால் செயற்படுத்த அதுமாத்திரமின்றி புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் தற்போது ஜனாதிபதி அதிகாரமொன்றை பெற்றுள்ளார்.
இதுவரை பாராளுமன்ற மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து சட்டங்களையும் கீழிறக்கி புதிய சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி தனத்து கையில் எடுத்துள்ளார் எனத் தெரிவித்த அவர், இதனூடாக சிவில் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும் .
நீதிமன்ற அனுமதியின்றி எவரையும் கைது செய்யலாம். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் நீண்டகாலம் தடுத்து வைக்கலாம். அதேபோல் காணி தவிர்த்து எதாவவொரு சொத்தையம் உரிமை கொண்டாட கூடிய சட்டத்தை செயற்படுத்த முடியும் .
பொருள்களின் விலை அதிகரிப்பு, தொகை வர்த்தகர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவே நுகர்வோருக்கு பாதுகாப்புக்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் கருத்தொன்று நிலவுகிறது. அத்தியாவசிய சேவையாக அறிவிக்க , பொருள்களுக்கு கட்டுபாடு விலையை நிர்ணயிக்க, சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவோ ஜனாதிபதிக்கு இவ்வாறான அதிகாரங்கள் தேவையில்லை.
அத்தியாவசியப் பொருள் தொடர்பாக பிரச்சினை என்றால் கொதுமக்கள் மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது, அத்தியாவசிய பொருள்களின் விலையை கட்டுபடுத்தம் நோக்கில் அவசரகால சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரத்தை ஏன் எடுத்துக்கொண்டார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.