இலங்கைக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்!

173 0

பிலிபைன்ஸினால் இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று (06) முதல் குறித்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து, ஒமான், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

பயணத்தடை நீக்கப்பட்ட போதிலும் குறித்த நாடுகளில் இருந்து பிலிபைன்ஸிற்கு வருவபவர்கள் 14 நாட்கள் தனுமைப்படுத்தலில் இருக்க வேண்டும் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.