இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை

280 0

athavan-card-copy-2-copy-copy3பொதுமன்னிப்பு காலத்தில் படைகளில் இருந்து சட்டரீதியாக தம்மை விடுவித்துக்கொள்ளாமல் முப்படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்கள் நாட்டில் இருந்து தப்பிச்செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

முப்படைகளிலும் உள்ள விடுமுறை அனுமதியில்லாமல் சேவைக்கு வராமல் இருந்தவர்களை சட்டரீதியாக சேவையில் இருந்து நீக்குவதற்கான பொதுமன்னிப்புக்காலம் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்தது.

இந்தக்காலத்தில் 34 அலுவலர்கள் உட்பட்ட 9ஆயிரம் படையினர் பொதுமன்னிப்பை பெற்றனர்.