கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 முதல் 29 அகவைக்குட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கல் நாளை முதல் ஆரம்பமாகும் என்று கோவிட் தொற்றுநோய் தடுப்பு தேசிய இயக்க மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டங்களில் 20 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது செயல்படும் அதே தடுப்பூசி மையங்களில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தடுப்பூசி மையங்கள் தவிர, கொழும்பு மாவட்டத்தில் உள்ள விஹாரமஹாதேவி பூங்கா, தியத உயன, பனகொட இராணுவ முகாம் மற்றும் வெரஹேரா இராணுவ முகாம் ஆகியவற்றில் 20 முதல் 29 அகவைக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.