இராசி பொருத்தம் அல்ல தடுப்பூசி பொருத்தம்!

252 0
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வ​யது வரையிலானோருக்கு ​தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும் சிலர் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்றன.

இந்நிலையில், ஒருவகையான தடுப்பூசியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த வகையைச் சேர்ந்த தடுப்பூசியை ஏற்றி​க்கொண்ட ஆண்கள் மட்டுமே தேவையென மணமகன் தேவையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.