தவிசாளரின் மூக்கை துண்டாடிய பெண்

161 0
தெரணியகல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் லக்ஸ்மன் ராஜகருணாவின் மூக்கை பெண்ணொருவர் துண்டாடிய சம்பவம் நேற்று  (4) பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அவர், தெரணியகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.“

பிரதேச சபையின் தவிசாளர் தனது வாகனத்தில் தெரணியகல நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, குறித்த பெண் வாகனத்தை வழிமறித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், சந்தேகநபரான பெண்,  ஆயுதமொன்றில் தவிசாளர் மீது தாக்குதல் நடத்திய போது, அவரின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தவிசாளரும் அப்பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதால் அப்பெண்ணும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துக்கு இருவருக்கும் இடையிலான சட்டவிரோத உறவே காரணமொக இருக்கலாம் என சந்தேகித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.