ஹெரோயினுடன் இரண்டாவது தடவையாக சிக்கிய பெண்கள்

278 0

penkal-2-300x169சீதுவ பிரதேசத்தில் ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து சீதுவ நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது குறித்த இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 4 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மற்றும் மீரிஹான பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.