ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினம் இன்று (செப்.5) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆசிரியர்களுக்குத் தங்கள் வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள்!
ஆசிரியப் பணி என்பது கல்வியைப் புகட்டுவதோடு, மனிதர்களை; அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் அறப்பணி. என்னரும் தமிழ்நாட்டின்கண் அனைவரும் கற்று இன்புறச் செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.