இனமுறுகல் ஏற்படும் அச்சம் – ஹக்கீம்

381 0

hakeem13அகழ்வாராச்சி என்ற போர்வையில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் இனங்களுக்கிடையிலான முறுகல் அதிகரிப்பதற்கான அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நெஸெபி பிரபுவிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனூடாக, பௌத்த வழிபாட்டுத் தளங்கள் அங்கு காணப்பட்டதற்கான நினைவுச் சின்னங்களும், தடையங்களும் இருப்பதாக வெளிக்காட்ட சில தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய முறையில் தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியது அவசியமாகும்.

இதேவேளை, நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், சிறுபான்மையினர் எதிர்நோக்கிவரும் காணிப் பிரச்சினை தொடர்கின்றது.

இது துரதிருஷ்டமானதாகும் என்று பிரித்தானிய பிரதிநிதியிடம் அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளார்.