போதையில் இருந்த காவல்துறை அதிகாரி கைது

279 0

siraiநல்லதண்ணி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது மதுபோதையில் இருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவரை மஸ்கெலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் காவல்நிலைய காவல்துறை பரிசோதகரே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவனொளிபாதமலை பருவகால விசேட சேவைக்காக சென்றிருந்த அவர் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மஸ்கெலிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.