தலைவர் பதவியை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை – கங்குலி

331 0

ganguly45566-25-1474783977இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவியை ஏற்கும் தகுதி தமக்கு இல்லை என்று முன்னாள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

லோதா குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க தவறியமைக்காக, கட்டுப்பாட்டுசபையின் தலைவர் அனுராக் தாகூர் இந்திய உயர் நீதிமன்றத்தினால் பதவி நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து, கங்குலியை தலைவராக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும், இதனை கங்குலி நிராகரித்துள்ளார்.

தற்போது பெங்கால் கிரிக்கட் சபையின் தலைவராக உள்ள அவர், ஒருவருட பதவி காலத்தையே நிறைவு செய்துள்ளார்.

தான் மேலும் 2 ஆண்டுகாலம் பதவி வகிக்க வேண்டி இருப்பதாகவும், அதன் பின்னரே இதற்கு தகுதி பெற முடியும் என்றும் கங்குலி கூறியுள்ளார்.