வடக்கு சிரிய வான் தாக்குதல் – 25 பேர் பலி

275 0

10வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்த பட்சம் 25 பேர் பலியாகினர்.

எந்த தரப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

வடக்கு சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நுஸ்ரா முன்னணியினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் தற்போது அமைதி உடன்படிக்கை அமுலாக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த உடன்படிக்கையில் நுஸ்ரா முன்னணி உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.