5 ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் – மத்திய வங்கி விளக்கமளிக்க வேண்டும்

284 0

5000_rupees-e1446283658824சட்டத்துக்கு புறம்பான முறையில் 5 ஆயிரம் ரூபா நாணயத் தாள்கள் ஆயிரத்து 300 கோடியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் மஹிந்த அணியினர் நேற்று கையளித்துள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

5 ஆயிரம் ரூபா நாணயத் தாள் விவகாரம் குறித்து நாட்டுக்கு தெளிவான அறிவிப்பை விடுக்க வேண்டும்.

அத்துடன், நாட்டின் நிதி நிலைமைகள் குறித்து பேச்சுவார்தையொன்றை நடத்த உடனடியாக சந்தர்ப்பமொன்றை வழங்குமாறும் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, 5 ஆயிரம் ரூபா நாணயத் தாள் விவகாரம் குறித்து தாம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.