அரசாங்கம், அமரிக்கா மற்றும் த.தே.கூட்டமைப்பு உடன்பாடு எதிராக மனு

690 0

Supreme-Court-of-Sri-Lanka-575-01-720x480இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை தொடர்பில், அரசாங்கம், அமரிக்கா மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது
அமரிக்க காங்கிரஸ்; குழு முன் உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், ஐக்கிய நாடுகள் யோசனை தொடர்பில் இலங்கை அரசாங்கம், அமரிக்கா மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த மூன்று தரப்புக்களுக்கும் இடையில் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் ஏதாவது உடன்பாடுகள் செய்துக்கொள்ளப்பட்டனவா? என்பது குறித்து தெளிவுப்படுத்த ஜனாதிபதியின் செயலருக்கு உத்தரவிடவேண்டும் என்றுக்கோரியே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.