மாநாயக்க தேரர்களிடம் மஹிந்த அணி முறைப்பாடு

265 0

joint-opposition1ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபகளுக்கு மஹிந்த அணியினரால் நேற்றுத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் நேற்று இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தினூடாக ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்துமாறு மாநாயக்க தேரர்களிடம் மஹிந்த அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த உடன்படிக்கை குறித்து நாடாளுமன்றத்துக்கும், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் துறைமுக அமைச்சருக்கும் தெரியவில்லை என்று சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் மறைந்து அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாயின், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையே ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.