சீனி மாஃபியாவால் இலாபம் பெறும் அரசாங்கம், வர்த்தக உரிமையாளர்கள் – விஜித ஹேரத்

228 0

அரசாங்கமும் வர்த்தக உரிமையாளர்களும் பொதுமக்களின் இழப்பில் சீனிக்கான இலாபத்தை ஈட்டுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் சீனி 75 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டாலும், வரிகளை சேர்த்து 85 ரூபாவிற்கு இலகுவாக விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனியின் விலையை கட்டுப்படுத்தியதால் கவலைப்பட வேண்டாம் என வர்த்தக அமைச்சர் பொது மக்களிடம் பெருமை பேசினார். இருப்பினும் தேவையான கையிருப்புக்களை வழங்க முடியவில்லை.

அவர்களிடம் உள்ள பழியை மாற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.