ரவிராஜ் வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடிவு

257 0

15590255_2020804057950791_5373772913664270958_n_copyபடுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் ஜயந்த ஜெயசூரியவை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து பேரும் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து கடந்த மாதம் 24ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்குத் தீர்ப்பின் பிரதியை தமக்கு வழங்குமாறு மேல் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தாம் கோரி இருப்பதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குறித்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து ஆராய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.