ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை விவகாரத்தை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள் நாட்டின் பொதுச்சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய முத் துறைகளும் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆகவே எதனையும் இரசகியமாக செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாதம் 12 ஆம் திகதியும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதியும் நடைப்பெறவுள்ளன. இவ்விரு கூட்டத்தொடர்களிலும் இலங்கை விவகாரம் நிச்சயம் கருத்திற் கொள்ளப்படும்-என்றார்