இந்தியாவுடனான உடன்படிக்கை மீளாய்வு – சந்திம வீரக்கொடி

272 0

6066480428_568a21198a_zஇலங்கையின் எண்ணெய் களஞ்சிய தாங்கிகள் தொடர்பில் 2002ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் மீள்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் கீழ் திருகோணமலையில் உள்ள குறித்த எண்ணெய்த் தாங்கிகள் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாதுள்ளன.

இந்த நிலையில், மீளமைப்பின் பின்னர் சுமார் 50 தாங்கிகளை இலங்கையின் பயன்பாட்டுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த தாங்கிகள் 2ம் உலகப்போர் காலப்பகுதியில் பிரித்தானியாவினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.