ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்- ஜி.கே.வாசன்

192 0

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை’ அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டதை தமிழக அரசு கைவிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள ‘ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை’ அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா கல்வித் துறையில் பலமாற்றங்களை கொண்டுவந்து கல்வியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைந்திருப்பது சாலச் சிறந்தது.

தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவரது பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் செயல் ஏற்புடையதல்ல.

இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடுக்கப்பட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

மேலும் “ஜெயலலிதா பல்கலைக்கழகம்” தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.