அறிக்கையில் கைச்சாத்திடாதோர் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி.

274 0

anurakumara-554feஎல்லை மீள்நிர்ணய அறிக்கையில் கைச்சாத்திடாதுள்ள இரண்டு உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜே வி பி வலியுறுத்தியுள்ளது.

அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத வலியுறுத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கை பசில் ராஜபக்ஷவினால் அரசியல் லாப நோக்கில் உருவாக்கப்பட்டது.

இது குழப்பம் நிறைந்ததாக காணப்பட்டதாலேயே புதிய அறிக்கையை தயாரிப்பதற்கான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் கைச்சாத்திடாததால், அதன் அறிக்கையை அமைச்சர் பைசர் முஸ்தபா நிராகரித்திருந்தார்.

எனவே, குறித்த இரண்டு உறுப்பினர்களும் இதில் ஏன் கைச்சாத்திடவில்லை என்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.