புகையிரதத்தில் குண்டுப்புரளி! யுவதி கைது!

260 0

201701031059578970_secretariat-employee-arrested-rs-6-lakh-bribe-to-government_secvpfகடந்த வாரம், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டின்பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை பொலிஸார் இந்த யுவதியை இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொலைபேசி அழைப்பை அடுத்து பதுளைக்கான புகையிரதத்தின் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

எனினும் எவ்வித சந்தேகப்பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட யுவதியை விசாரணை செய்தபோது தமது நண்பரான இளைஞர் மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்ய குறித்த புகையிரதத்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காகவே தாம் அவ்வாறு செய்ததாக யுவதி தெரிவித்திருந்தார்.இந்தநிலையிலேயே யுவதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.