இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களதும் பணியாளர்களும் உயிருடன் விளையாடுவதாக ஊழியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
புணியாளர்களை கடமைக்கு சமூகமளிக்க அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில் பல்கலைக்கழக கொரோனா கட்டுப்பாட்டு செயலணிக்குழு செயலிழந்துள்ளது.
அவ்வாறானதொரு செயலணிக்குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவானது தனது கடமையை சரிவர ஆற்றியிருந்தால் பணி;யாளர்கள் தொற்றால் பாதிக்கப்படவோ மரணிக்கவோ வேண்டிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இன்று இலங்கையிலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ள கொரோனா தொற்று நிலைமை குடிமக்கள் பரம்பல் அடிப்படையில் ஒப்பிடும்போது மிக மோசமாகவுள்ளதென்பதையும் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.