ஐ.தே.கட்சியை தோற்கடிப்பதற்கு மைத்திரியும் மஹிந்தவும் ஒன்றிணைய வேண்டும்

253 0

d01d0d5ccc69aebda0a48fc326c6e7d7_xlஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் உறுப்பினர்களுடன் கைகோர்க்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியை கவிழ்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.பெரிய மற்றும் சிறிய படைகள் அனைத்தும் கைகோர்த்துக் கொண்டால் ‘யானையை தோற்கடிக்கலாம் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளவர்கள் மற்றும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணையாதவர்கள் அனைவரும் கைகோர்த்தால் மாத்திரமே இந்த முயற்சியில் ஈடுபட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன் ஐக்கியப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.