கோதுமை விலையும் கூடியது

262 0

ஒரு கிலோகிராம் கோதுமை மா 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரிமா நிறுவனம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

ஒருகிலோ கிராம் கோதுமை மாவை 87 ரூபாவுக்கு விற்பனை செய்யவேண்டும். இந்நிலையிலேயே மேற்கண்டவாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என அவ்வியக்கம் சுட்டிக்காட்டுள்ளது.

இந்நிலையில், அந்த விலை அதிகரிப்புக்கு கடுமையாக எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.