சிறையில் ரிஷாத்துக்கு கைத்தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டு!- சிறைக்காவலருக்கு இடமாற்றம்

178 0

சிறையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கு கைத்தொலைபேசி ஒன்றை வழங்கியாக குற்றம் சாட்டப்பட்ட சிறைக் காவலர் ஒருவர் மகசின் சிறையிலிருந்து இடம் மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் மகசின் சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைக்காவலருக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிறைக்காவலருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சிறைச்சாலை தலைமையகம் குறித்த சிறைக்காவலரை மகசின் சிறையிலிருந்து வவுனியா சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.