நோர்வே நாட்டின் Agder பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினரும், ஒன்றியத்தின் விஞ்ஞான பரீட்சைகள் மையத்தின் வளவாளருமான செல்வி. ரவீனா சுகுமாரே இவ்வாறு நோர்வேக்கு செல்லவுள்ளார்.
ரவீனா சுகுமார் யாழ் பல்கலைக்கழத்தின் இரசாயனவியல் துறையில் முதன்மை மாணவியாக தேர்வாகிய நிலையில் இந்த அரிய வாய்ப்பினை பெற்றுள்ளார். இந்த 06 மாத ஆய்வு கற்கை நெறியில் செல்வி. ரவீனா நோர்வே நாட்டு விஞ்ஞானிகளுடன் பணியாற்றவுள்ளார்.
இதேவேளை ரவீனா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் துறையின் உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.