கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ, 2017ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக சூழுரைத்திருந்தார். இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் அடுத்த வாரம் சுவிற்சர்லாந்து பயணமாகவுள்ளதாகவும், அப்போது மகிந்த ராஜபக்ஷ முடிந்தால் ஆட்சியைக் கவிழ்க்கட்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ரணிவில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாதபோது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நானொன்றும் முதுகில் குத்துபவனல்ல.ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்லும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அவர் சிறிலங்காவில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பது தான் எனது திட்டம்.
தற்போதைய ஆட்சியாளர்களைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் முரடர் குழு, அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஐதேக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவியமை தாம் செய்த தவறு என்று இப்போது எல்லோரும் உணரத் தொடங்கியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.