கிளிநொச்சியில் கடந்த மாதத்தில் மட்டும் 4,112 பேருக்கு கொவிட் தொற்று; 30 பேர் பலி

223 0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 4112 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 30 பேர் தொற்றால் உயிரிழந்தனர் என்று கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

சுமார் 146 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் மேற்படி எண்ணிக்கையிலான கொவிட் தொற்றாளர்கள் என்பது அதிகரித்த தொகை என்பதோடு, மரணங்களும் அதிகரித்தே காணப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை, மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மாத்திரம் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 45 பேர் வரையான சுகாதாரப் பணியாளர்களும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே, தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத்துறையினரால் நோயாளிகளை முறையாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே பொது மக்கள் மிகுந்த சமூக பொறுப்புடன் கொவிட் – 19 சுகாதார நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி நோய் தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் உறவு களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் தரப்பினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.