மைத்திரியின் யாழ்ப்பாண பயணம் ரத்து!

266 0

7881987072சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவிருந்த ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வலிவடக்குப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தினை மக்களிடம் கையளிக்கவிருந்ததுடன், யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறவிருந்த மரநடுகை நிகழ்விலும் கலந்துகொள்ளவிருந்தார்.

அத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில் ஜனாதிபதி குறைகேள் அலுவலகத்தையும் திறந்துவைக்கவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றுப் பின்னேரம் குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் அறிவித்திருந்தது.