நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதனால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை முன்னர் காணப்பட்ட வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடித்தாலும் மாகாணங்களுக்கு உட்பட்டு பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.
எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடித்தால் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறமாட்டாதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.