துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது

270 0

894740513amaraதுப்பாக்கிகளைப் பயன்படுத்தி நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனகொலபெலெஸ்ஸவில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,மேலும் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் என்ற முறையில் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உள்ளூராட்சித் தேர்தல் நடாத்தப்படும் எனத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டை காணிகள் சீனாவுக்கு விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. தோல்வியுற்ற அரசியல்வாதிகளே தமது மீள் எழுச்சிக்காக இத்தகைய வதந்திகளைப் பரப்புகின்றனர்.

சீனாவுக்கு ஒரு அங்குல நிலம் கூட விற்கப்படாது. நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக குத்தகை அடிப்படையில் கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்காகவே குறித்த நிலங்கள் வழங்கப்படுகின்றன.வாக்குகளால் மாத்திரமே இந்த அரசாங்கத்தை கவிழ்க்கமுடியும். துப்பாக்கிகளால் ஒருபோதும் கவிழ்க்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.