விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் 2000 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு உள்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளார் என இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.