சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது- பிரகாஷ் மரணம் குறித்து முன்னாள் மனித உரிமை ஆணையாளர்

202 0

வாழ்க்கையில் பல தடைகளை தாண்டியவரை ஆனால் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது என யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் மரணம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்.பிகா சற்குணநாதன் கருத்துவெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

சமூக விடயங்கள் குறித்த பிரகாஸ் ஞானப்பிரகாசத்தின் கரிசனை என்பது அவை குறித்துஅறிக்கையிடுவதுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை,அநீதி வன்முறைகளை எதிர்கொள்பவர்களிற்கு ஆதரவளிப்பதற்காக அவர் குரல் கொடுத்தார் – பலரை தொடர்புகொண்டார்.

இவ்வாறான இழப்புகள் எங்களை சீற்றமடையச்செய்கின்றன, வாழ்க்கையில் பல தடைகளை தாண்டியவரை ஆனால் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பு செய்த ஒருவரை எங்கள் அமைப்பு முறை கைவிட்டுள்ளது.

கொவிட் காரணமாக நாங்கள் அறியாத பல இழப்புகள் இடம்பெற்றுள்ளன, எங்கள் சமூகத்தில் பலவீனமான நிலையில் உள்ளவர்கள் பாதுகாக்கப்படவில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.