இரண்டு வாரங்களிற்கு முடக்கல்நிலையை நீடிக்கவேண்டும் – அசேல குணவர்த்தன

274 0

தற்போதைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் பலன் கிடைக்கவேண்டும் என்றால் தற்போதைய முடக்கல்நிலையை மேலும் இரண்டு வாரங்களிற்கு நீடிக்கவேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடையும் நாட்டை மீண்டும் திறக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் நடுப்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியானால் ஒக்டோபர் இறுதியில் நாடு வழமைக்கு திரும்பும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பூஸ்டர் டோஸ்களை வழங்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்