இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 204 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமைய இம்மரணங்கள் அனைத்தும் கடந்த 1 ஆம் திகதி நிகழ்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இது வரை கொரோனா தொற்றினால் 9,604 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் சம்பவித்த 204 மரணங்களில் 109 ஆண்கள் மற்றும் 95 பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
30 வயதிற்கு குறைந்த 3 ஆண்கள் மற்றும் 2 பெண்களும் இதன் போது உயிரிழந்துள்ளனர்.
30 மற்றும் 59 வயதிற்கு இடைப்பட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் அடங்குகின்றனர்.
மேலும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 149 பேரும் உயிரிழந்துள்ளனர். 76 ஆண்கள் மற்றும் 73 பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.