நாட்டில் எந்ததவித அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை என்று அதன் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
மருத்துவ விநியோக பிரிவின் உத்தியோகபூர்வ தரவு களஞ்சியம் ஒன்று உண்டு. நாட்டில் 230 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 1200 க்கும் மேற்பட்ட வில்லைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உரிய மருந்து வகைகளின் எண்ணிக்கை 400 ஆகும்.
இவற்றில் 11 வகையான மருந்துகள் நிறைவு கட்டத்தில் உள்ளன. 1200 மருந்து வகைகளில் 25 க்கும் 30 க்கும் இடைப்பட்ட மருந்துகள் இறுதிகட்டத்தில் உள்ளன. நான் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் 300க்கும் 400 க்கும் இடைப்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நல்லாட்சி காலத்தில் மருந்து தட்டுப்பாடுகள் நிலவிய காலப்பகுதியில் சாதாரண ´டெண்டர்´ வழிமுறைக்கு முரணாக அவசரமான கொள்வனவுகள் இடம்பெற்றன. எனினும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போதைய அரசாங்கம் அவசரமாக கொள்வனவு செய்யும் முறையை நிறுத்தியுள்ளது. நல்லாட்சி காலத்தில் புற்றுநோய்க்கான ஒரு மருந்தை 55 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் கடந்த வருடம் அந்த மருந்தை தற்போதைய அரசாங்கம் 17 ஆயிரத்து 735 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளது. இதனால் இந்த மருந்தின் ஊடாக மாத்திரம் நாட்டிற்கு 122 மில்லியன் ரூபா எஞ்சியுள்ளது என்றும் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.