சம்பளம் தொடர்பில் தவறான கருத்து; 97,945 ரூபா அதிபருக்கான சம்பளத்தை சம்பாதிக்கக் குறைந்தது 70 ஆண்டுகள் செல்லும்- மஹிந்த ஜயசிங்க

174 0

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக முக்கியமான உண்மைகளை மறைத்து சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தவறான கருத்துகளை சமூக மயமாக்க முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

சிலர் கூறுவது போல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆயிரக்கணக்கான ரூபாவை சம்பாதிக்க 70 ஆண்டுகள் ஆகும் என அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளம் 44,950 ரூபாவானது தற்போது 11,820 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 56,770 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அதன்படி 11,820 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் 89,370 ரூபா உச்ச பட்ச சம்பளம் என்றும், அதிபர்களின் சம்பளம் 58,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் 97,945 ரூபா முழுத் தொகையாக அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளதாகவும் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் உண்மைத் தன்மை என்ன என்பது மூடிமறைக் கப்பட்டுள்ளது என்றும் சம்பளம் உயர்த்தப்படும் காலம் குறித்து அறிவிக்கவில்லை என்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் எக்காலப் பகுதியில் அதிகரிக்கப்படும் என்பது மறைக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த சம்பளத் தொகையைப் பெற எவ்வவு காலம் செல்லும் என்பதை மறைத்துள்ளனர் என்றும் சிலர் கூறுவது போல் 97,945 ரூபா அதிபருக்கான சம்பளத்தை சம்பாதிக்கக் குறைந்தது 70 ஆண்டுகள் ஆகும் என்றும் சம்பளம் வழங்கும் முறை நான்கு கட்டங்களாக வழங்கப்படும் என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.