அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக இந்திய வம்சாவழியை சேர்ந்த ஐந்துபேர் பதவி ஏற்று கொண்டனர்.
அமெரிக்க பாராளுமன்றத்துக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய வம்சாவழியினரான கமலா ஹாரிஸ், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, துல்சி கப்பார்ட், பிரமிளா ஜெய்பால் ஆகியோர் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.
இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி ‘பகவத் கீதை’யின் மீது கைவைத்து சத்திய பிரமாணம் செய்தார்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள்தொகையில் ஒருசதவீதமாக மட்டுமே உள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையான 100 உறுப்பினர்களின் இடத்தில் 5 இடங்களை இந்திய வம்சாவழியினர் பிடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் சார்பில் அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்ற இவர்கள் ஐந்து பேரையும் வாழ்த்தும் வகையில் மாபெரும் பாராட்டி விழா நடத்தப்பட்டது.