முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் நாளை சந்திப்பு

279 0

201701040959453294_mk-staliln-meet-cm-o-panneerselvam-in-tomorrow_secvpfவிவசாயிகள் பிரச்சனை குறித்து பேச முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கருகிய பயிர்களை கண்டு இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி நாளை (5-ந்தேதி) விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி நாளை (5-ந்தேதி) விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தோம். முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசிய போது எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்து உள்ளார்.

மேலும் விவசாயிகள் பிரச்சனை குறித்து நாளை (5-ந்தேதி) எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.எனவே 5-ந்தேதி (நாளை) நடைபெற இருந்த விவசாயிகள் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.