கொழும்பு திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தீப்பரவல்!

265 0

fireகொழும்பு – டெரின்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் திடீரென தீப்பரவியுள்ளது.

குறித்த இடத்திற்கு தீயணைக்கும் வாகனங்கள் இரண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் தீயணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தீயினை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என கூறப்படுகின்றது.