லொத்தர் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு; லோட்டஸ் வீதிக்கு பூட்டு

251 0

2128174039traficcதேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்படும் லொத்தரின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லொத்தர் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து கோட்டை வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

20 ரூபாவாக இருந்த லொத்தர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமைக்கு பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த லொத்தர் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு லொத்தர் விலை அதிகரிக்கப்படுமாயின் தமக்கு கிடைக்கும் கழிவுத் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.