நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவேன்

256 0

495871943herisnநெல் விநியோகத்தின் போது ஆலை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதாக சிலர் தன்மீது குற்றம் சுமத்துவதாகவும், தான் அவ்வாறு நடந்து கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி ஹாரிசன் கூறினார்.
அரிசிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சம்பந்தமாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்,

இதற்கு முன்னர் அமைச்சரின் கடிதத்திற்கு அமைவாகவே நெல் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அரசாங்கத்தில் நாங்கள் நெல் விநியோக சபையினூடாக கேள்விப்பத்திரம் கோரியே நெல் விநியோகம் செய்கின்றோம்.

அதேபோன்று நெல் கொள்வனவிற்காக ஒரே நபர் பல கேள்விப்பத்திரங்களை தாக்கல் செய்யும் பிரச்சினையும் இருந்தது. எனினும் அதிக விலைக்கு கேள்விப்பத்திரம் தாக்கல் செய்தவருக்கே வழங்க வேண்டும் என்பதால் அதன்படியே நாம் வழங்கினோம்.

தற்போது காணப்படுகின்ற நிலமைக்கமைய எதிர்வரும் நாட்களில் அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.