இலங்கை முழுவதும் அவசரகாலநிலை பிரகடனம்!

199 0

இலங்கை முழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படப்படுத்தபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்தில், இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தல், சிங்கள மொழியில் மட்டுமே வெளியாகியுள்ளது. அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு சட்டத்தரணிகள் பலர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

“ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அதிவி சேட வர்த்தமானி அறிவித்தலில், நாடு பூராவும் வெகுசீக்கிரமாகப் பரவிகொண்டிருக்கும் கொவிட்-19 நிலைகளின் பிரகாரம், இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலைமை ஏற்பட்டிருப்பதை கருத்தில்கொண்டு, மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நிலைமையை பாதுகாப்பதற்காக, மக்களின் வாழ்க்கைக்குத் தேவையானதை
விநியோகிப்பதற்காக, சேவைகளை வழங்குவதற்காக, இது முக்கியமான
தருணமாகும்.

ஜனாதிபதியாகிய தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் மற்றும் கட்டளையின் பிரகாரம் அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக அவசர கால நிலைமை நாடளாவிய ரீதியில் ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.