கடந்த அரசாங்கம் கட்டுமானம் மூலம் திருடியது; இந்த அரசு விற்பனை மூலம் திருடுகிறது

263 0

1505372022anura22கடந்த அரசாங்கம் கட்டுமான நடவடிக்கைகள் மூலம் திருடியதாகவும், தற்போதைய அரசாங்கம் விற்பனை மூலம் திருடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கல் அதுபோன்ற மிகவும் ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஊழல் மோடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதே இந்த அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதியாக இருந்தது. எனினும் ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக திருடர்களின் பாதுகாவலர்களாக இந்த அரசாங்கம் மாறியுள்ளது. அதேபோல் ஊழல் மோசடிகளில் பங்காளராகியுள்ளது என்று அவர் கூறினார்.

அதேபோன்று தற்போது அரிசி விலை அதிகரித்திருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வறட்சி நிலமை காணப்படுவது உண்மை. எனினும் அரிசி விலை அதிகரிப்பிற்கான காரணம் அதுவல்ல என்றார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைப்படி, விற்பனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் இவ்வாறு விற்பனை செய்வது பொதுமக்களின் சொத்துக்களை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டுவதற்காக கடன் பெற்றனர். அதனை பொது மக்களே செலுத்த வேண்டும்.

அது நிர்மானிக்கப்பட்டிருப்பதும் மக்களின் நிலத்திலேயே. ஆகவே அதனை விற்பனை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. அதன் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் உடன்படிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகின்றோம் என்று அநுரகுமார திசாநாயக்க கூறினார்.