ஊடகவியலாளரின்  வீட்டில் திருடர்கள் கைவரிசை

285 0

 

theft_plane_sympol-robberyஊடகவியலாளரின் வீட்டில் நள்ளிரவில் புகுந்த  திருடர்கள் பணம், நகை என்பவற்றை கொள்ளையிடடுச் சென்றுள்ளனா்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
விசுவமடு  இளங்கோபுரம்  பகுதியில் வசித்து வரும் சுயாதீன ஊடகவியலாளா் ஒருவரின் வீட்டிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தினத்தன்று வீட்டில் உள்ளவா்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது சமையலறை புகை கூட்டின் ஊடாக வீட்டிற்குள் இறங்கிய திருடர்கள்    அறை ஒன்றினுள் இருந்த அலுமாரியில்  வைத்திருந்த பதினைந்து பவுனுக்கு மேற்பட்ட நகைகள் மற்றும் அறுபதாயிரம் ரூபா  பணம் என்பவற்றை எடுத்துக்கொண்டு வீட்டு கதவினை திறந்து வெளியேறியுள்ளனா்.
இது தொடா்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குசென்று காவல்துறையினர்  நிலைமைகளை நேரில் அவதானித்து சென்றுள்ளனா்