மாங்குளத்தில் ஒருதொகுதி சாராயம் கைப்பற்றல்

283 0

unnamed-17வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகுதி சாராயம் மாங்குளம் காவல்துறையினரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி வாகனமொன்றில் மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட அரச முத்திரை பொறிக்கப்பட்ட 750 மில்லிலீட்டர் அளவுடைய 84 போத்தல்களும் 180 மில்லிலீட்டர் அளவுடைய 64 போத்தல்களும் தென்னம்சாராயம் 4 மற்றும் Bule safari 2 ஆகியவையே கைது செய்யப்பட்டுள்ளது

வீதிச்சோதனையில் இருந்த மாங்குளம் காவல்துறையினர் குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது மேற்குறித்த சாராய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வாகனத்துடன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை நாளை நீதிமன்றத்தில் முற்ப்படுத்தவுள்ளதாக மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்