கருவலகஸ்வெவ – குடமெதவாச்சியா பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த யானைக் குட்டியை பத்திரமாக மீட்டு காட்டுக்குள் விடப்பட்டதாக கருவாகலஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, நேற்று (30) சம்பவ இடத்திற்கு வருகை தந்த கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் பொதுமக்களின் உதவியுடன் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் வீழ்ந்த யானைக்குட்டியை பாதுகாப்பாக மீட்டனர்.
இரண்டு வயது நிறைந்த குறித்த யானைக்குட்டி உணவு உண்பதற்காக யானைக் கூட்டங்களுடன் வருகை தந்த நிலையில், கைவிடப்பட்ட இந்த கிணற்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.