தனியார் நிறுவனங்களை விட அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதா?

180 0

கொவிட் தொற்றைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனை கருவியின் விலை 80 ரூபாவாகும். அவ்வாறிருக்கையில் இதற்காக அப்பாவி மக்களிடம் 2,500 ரூபா அறவிடப்படுவது மாபெரும் அநீதியாகும். இதனைக் கூட கொள்வனவு செய்ய முடியாதளவிற்கு தனியார் நிறுவனங்களை விட அரசாங்கம் பலவீனமடைந்துள்ளதா என்று ஓமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பினார்.

இதே வேளை வெளிநாடு செல்லவுள்ளோர் 16,500 ரூபா பணம் செலுத்தினால் மாத்திரமே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் இவ்வாறான அநீதியான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமையும் பொறுப்புமாகும் என்றும் ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.