விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் ஒட்ட வேண்டும் – பொ.வாகீசன்

374 0

04-2-1024x683யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் விளம்பரங்கள், சுவரொட்டிகளை ஒட்ட முடியும் என யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.

சுவரொட்டிகளை சொந்த மதில்களில் காட்சிப்படுத்துவதற்கு தடைகள் இல்லை என்றும், ஆனால் மற்றறையவர்களின் ஆதனங்களில் காட்சிப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.